இன்றே கடைசி நாள்....இரண்டாம் தவணைத் தொகை, மளிகைப் பொருட்கள் வாங்க....
வெள்ளி, 25 ஜூன் 2021 (16:36 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் பதவியேற்றதும் கூறிய வாக்குறுதியின்படி ரேசன் கடைகளில் ரேசன் அட்டைதாரர்களுக்கு கொரொனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என்று அறிவித்து அதைச் செயபடுத்தினார்.
முதல் தவணையாக ரூ.2000 கடந்த மே மாதத்தில் வழங்கப்பட்டது., இரண்டாம் தவணையாக கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை வரும் 25 ஆம் தேதிக்குள் ( இன்று) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கொரொனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணத் தொகை மற்றும் மளிகைப் பொருட்களைப் பெறுவதில்தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே வரும் 25 ஆம் தேதிக்குள் ( இன்று ) இவற்றை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.