சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம்! – தமிழக அரசு புதிய உத்தரவு!

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (08:57 IST)
நாட்டின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முக்கிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு கிராம மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு அதுகுறித்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராம சபை கூட்டங்கள் குறித்து முன்பே மக்களுக்கு இடம், நேரம் ஆகியவை தெரியப்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டங்களை நடத்தி அறிக்கையை ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்