''திறனறித் தேர்வு'' எப்போது? தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் தகவல்

சனி, 6 ஆகஸ்ட் 2022 (14:38 IST)
தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு குறித்த அறிவிப்பை தமிழக அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

அதில்,  தமிழ் தெரிந்த 11 ஆம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற  இணையதளத்தில்  வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

மேலும்,   இந்த திறனறித் தேர்வில் 10 ஆம் வகுப்புப்பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் எனவும், இத் தேர்வு எழுதும் மாணவர்களின் இருந்து சுமார் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 12 ஆம் வகுப்பு முடிக்கும் வரை அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1500 வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இத்தேர்வில் பங்கேற்க தமிழக மாணவர்கள் ஆர்வமுடம் உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்