தமிழகத்தில் இரண்டு கட்ட தேர்தல்? – தேர்தல் ஆணையத்தின் முடிவு என்ன?

Webdunia
ஞாயிறு, 3 ஜனவரி 2021 (12:44 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆனால் கொரோனா காரணமாக தேர்தலை பாதுகாப்பாக நடத்தவும், ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் வாக்காளர்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்தாமல் இரண்டு கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்