கேரள கோழிகள் தமிழகம் கொண்டு வர தடை! – பறவைக்காய்ச்சல் எதிரொலி!

Webdunia
செவ்வாய், 5 ஜனவரி 2021 (08:32 IST)
கேரளாவில் பறவைக்காய்ச்சல் வீரியமடைந்துள்ள நிலையில் கேரளா கோழிகளை தமிழகம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் ஆழப்புலா, கோட்டயம் பகுதிகளில் வளர்ப்பு கோழிகள், வாத்துகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேரள கோழிகளை தமிழகம் கொண்டு வர தடை விதித்து கால்நடைத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

கோழி, வாத்துகளை கொண்டு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தவும், கண்காணிக்கவும் கேரள எல்லையில் உள்ள 6 மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் சோதனை பணிகளை தீவிரப்படுத்தவும் உத்தரவு வெளியாகியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்