சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவை ஒருசில மணி நேரத்தில் டுவிட்டர் இந்தியா நீக்கியது. அந்த வீடியோவில் கொரோனா வைரஸை 12 முதல் 14 மணி நேரம் வரை பரவாமல் தடுத்துவிட்டாலே மூன்றாம் நிலைக்கு செல்வதை தடுக்க முடியும் என்று ரஜினி கூறியதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்பதால் அந்த வீடியோ நீக்கப்பட்டதாக டுவிட்டர் விளக்கம் அளித்திருந்தது
இந்த நிலையில் ரஜினியின் வீடியோ டெலிட் செய்யப்பட்டது குறித்து அரசியல்வாதிகளும், ரஜினியின் ரசிகர்களும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெப்பநிலை மற்றும் மழை குறித்த விபரங்களை துல்லியமாக தெரிவித்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் கொரோனா வைரஸ் குறித்த கருத்த கருத்து தவறு என்று கூறியுள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘ரஜினிகாந்த் நல்ல நோக்கத்தோடு அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தாலும், அந்த வீடியோவில் அவர் தெரிவித்த கொரோனா குறித்த கருத்து தவறுதான். கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் செத்து விடும் என்று கூறியதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்றும் இதுவரை யாரும் இதை அறிவியல் பூர்வீகமாக நிரூபணம் செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ரஜினிகாந்த் கூறிய சுய ஊரடங்கு உத்தரவு உள்பட மற்ற கருத்துகளுக்கு நான் முழு ஆதரவு தெரிவிக்கின்றேன் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.