கொரோனாவை கொல்லும் மருந்து – பெயரை வெளியிட்ட ட்ரம்ப்!

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (09:23 IST)
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை அழிப்பதற்கான மருந்துகளின் பெயரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையிலும், ஈரான், இத்தாலி நாடுகளில் பலி எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கொரோனாவை தடுப்பதற்கான மருந்துகள் குறித்து அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “HYDROXYCHLOROQUINE & AZITHROMYCIN ஆகிய இரண்டு மருந்துகளையும் ஒன்றாக சேர்த்து உட்கொண்டால் மருத்துவத்துறை வரலாற்றில் பெரும் மாற்றத்தை காணலாம். இரண்டாவது மருந்தை விட முதல் மருந்து வேகமாக செயல்படும். உடனடியாக இதை மக்களுக்கு வழங்குங்கள் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரிந்துரைத்துள்ள மருந்துகள் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறையால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்