அடுத்த 4 நாட்களுக்கு கனமழை: சென்னையின் நிலை என்ன?

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:26 IST)
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ காற்றால் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென் தமிழக பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது.
 
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளுவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்