ஐபிஎல் தொடரின் முதல் ஓவர் கிங் – கலக்கிய ட்ரண்ட் போல்ட்!
புதன், 11 நவம்பர் 2020 (17:48 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்ரண்ட் போல்ட் தான் வீசிய முதல் ஓவர்களில் மட்டும் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
நேற்று நடந்து முடிந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமான வெற்றியை பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. அந்த அணி பேட்டிங், பவ்லிங் மற்றும் பீல்டிங் என அனைத்துத் துறையிலும் சம பலத்துடன் விளங்கியதே இதற்குக் காரணம்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ட்ரண்ட் போல்ட் இந்த தொடரில் மொத்தம் 25 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதில் 8 விக்கெட்களை ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கைப்பற்றி எதிரணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.