தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை !

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (13:43 IST)
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனால், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்