அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்றும் கூட சென்னையில் உள்ள தி நகர், தேனாம்பேட்டை, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி அன்று மிக கனமழை அல்லது மிக மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்பொது அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்ப்ட்டுள்ளது. இதனோடு கூடுதலாக நவம்பர் 15ல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.