அடுத்த 3 மாதங்களுக்கு கொரோனா விதிமுறைகள் தொடரும்...!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (10:03 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

 
தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கொரோனா விதிமுறைகளை இன்னும் 3 மாதங்களுக்கு கடைபிடிக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
மேலும் அவர் கூறியதாவது, தற்போது தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என நினைக்க வேண்டாம். கொரோனா 4ம் அலை வருமா என்று தெரியவில்லை. ஆனால், அவற்றிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்