எலக்ட்ரானிக்ஸ் பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை!

Sinoj
திங்கள், 22 ஜனவரி 2024 (15:34 IST)
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், எலக்ட்ரானிக்ஸ் பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும்  1 பில்லியன் அமெரிக்க்க டாலர் எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ஒரு மாதத்தில் தமிழ்நாடு $1.05 பில்லியன் டாலர் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இதனால் டிசம்பர் மாதம் இந்திய எலக்ட்ரானிக்ஸ்  பொருள் ஏற்றுமதியில் தமிழகத்தில் பங்கு சுமர் 40 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

கடந்தாண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் மட்டும் 6.64 அமெரிக்க டாகர் மதிப்புள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்