தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (19:47 IST)
தமிழகத்தில் ஏற்கனவே நான்கு நாட்கள் மழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஜனவரி 10ஆம் தேதி கடலோர மாவட்டங்களிலும், ஜனவரி 16 ஆம் தேதி தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஜனவரி 12-ஆம் தேதி தென்மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
சென்னை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்க கடலில் மத்திய பகுதியில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்