கொரோனா கட்டுப்பாட்டுகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்- விஜயகாந்த்

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (17:51 IST)
புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என  தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சீனாவில் மிக அதிகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து இந்தியாவிலும் பரவலாம் என்ற காரணத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசு விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தை அடுத்து, ஒவ்வொரு  மா நிலமும் இதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாட்ந் தெரிவித்துள்ளார்.

ALSO READ: அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துகள் கூறிய விஜயகாந்த்
 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’புத்தாண்டு போன்ற பண்டிகைகள் வருவதால் பொதுமக்கள் அதிக அளவில் ஒன்று கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பண்டிகைகளை தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும்.

புதிய வகை கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும். பொது இடங்களில்
சமூக இடைவெளியை கடைபிடிப்பதை தவிர, மக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்வது போன்ற கொரோனா வழிக்காட்டு முறைகளை மீண்டும் நடைமுறைபடுத்த தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்