திருமணங்களை இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்: தமிழக அரசின் புதிய திட்டம்

Siva
வியாழன், 2 ஜனவரி 2025 (09:26 IST)
புதிதாக திருமணம் செய்யும் தம்பதிகள், திருமணத்தை ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது.

தற்போது பத்திர பதிவு அலுவலகங்களில் திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், திருமண பதிவு சட்டத்தின் கீழ், தமிழகத்தில் நடைபெறும் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்ற நிலையில், பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வருகிறார்கள் என்றும் மற்றவர்கள் பதிவு செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

 இந்த நிலையில், திருமண பதிவிற்கு 100 ரூபாய் மற்றும் கம்ப்யூட்டர் கட்டணம் 100 ரூபாய் என 200 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற நிலையில், அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் வந்த நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு தற்போது ஆன்லைன் திருமணத்தை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர உள்ளது.

வீட்டில் இருந்தே ஆன்லைனில் கட்டணம் செலுத்தி, ஆவணங்களை அப்லோடு செய்து, திருமணங்களை பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக, அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் திருமணங்களை பதிவு செய்வதால், லஞ்சம் உள்ளிட்ட மோசடி தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்