சென்னை உள்பட 7 மாவட்டங்களில் `ஸ்கரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Siva
வியாழன், 2 ஜனவரி 2025 (09:22 IST)
சென்னை உள்பட ஏழு மாவட்டங்களில் `ஸ்கரப் டைபஸ்' என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து பொது சுகாதாரத்துறை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், `ஸ்கரப் டைபஸ்' என்ற பாக்டீரியா வகை ஒரு தொற்று நோயாகும். இந்த பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும் போது இந்த நோய் ஏற்படுகிறது.

காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் அரிப்பு ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் இந்த நோய் அதிகமாக பரவி வருவதாகவும், கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் சில பாதிப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விவசாயிகள், புதர் மண்டிய வனப்பகுதியில் வசிப்பவர்கள், மலை ஏற்றத்தில் ஈடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இதற்கான நோய் எதிர்ப்பு மருந்துகளை டாக்டரின் அறிவுரைப்படி எடுத்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்