தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி ஆந்திரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட வங்க கடலோர மாநிலங்கள் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவை பெற்று வருகின்றன.
இதனைத்தொடர்ந்து வெளியான அறிவிப்பில் தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திருச்சி, நாகை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.