காவிரி மற்றும் ஸ்டெர்லைட் விவகாரம் : தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதம்

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (17:25 IST)
காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருக்க தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலை பிரச்னைக்காகவும் உண்ணாவிரதம் இருக்க தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் கூறியதாவது:
 
“நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் தயாரிப்பாளர்கள் ஒரு கூட்டு குடும்பமாக தான் வேலை செய்து வந்தார்கள். தயாரிப்பு என்பது ஒரு தயாரிப்பாளர் மட்டுமே செய்யும் வேலை அல்ல அதை தமிழகத்தில் உள்ள அனைத்து விநியோகஸ்தர்களும் , திரையரங்க உரிமையாளர்களும் இனைந்து செய்யும் வேலை. அனைவரும் ஒவ்வொரு படத்தையும் தங்களுடைய படமாக நினைத்து தான் வேலை செய்து வந்தார்கள். இதையெல்லாம் நான் பத்து வருடங்களாக கண்ணால் பார்த்திருக்கிறேன். ஒரு கூட்டாக இணைந்து செய்யப்பட்டுக்கொண்டிருந்த இந்த தொழில் நம்பிக்கையின்மையால் மாறியுள்ளது.
 
திரையரங்குகளில் ஆன்லைன் டிரான்ஸ்பரன்சி கண்டிப்பாக வேண்டும். ஆன்லைன் டிரான்ஸ்பரன்சி கண்டிப்பாக இருக்கும் போது நடிகர்களின் படங்கள் தோல்வி அடையும் போது அவர்களின் சம்பளத்தை குறைக்கும்படியும், படம் வெற்றி பெறும் போது அவர்கள் அடுத்த படத்திலிருந்து அதற்கு ஏற்றவாறு சம்பளத்தை ஏற்றுவதற்கும் உதவியாக இருக்கும். எந்த வித கணக்கு வழக்கும் இல்லாமல் ஒரு நடிகரை சம்பளத்தை குறைக்க சொல்லும் போது அந்த நடிகர்கள் மனரீதியாக வருத்தப்படுகிறார்கள். 
 
ஆன்லைன் டிக்கெட் புக்கிங்  கட்டணம் அதிகமாக இருப்பதால் மக்கள் திரையரங்குக்கு வருவது குறைந்துள்ளது, அதனால் அதை குறைக்க வேண்டும். சினிமா என்பது மக்களுக்காகத்தான். நாங்கள் இந்த  விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆதரவாக இருப்போம். மேலும் காவரி மேலாண்மை, ஸ்ட்ர்லெட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக அழுத்தம் தரும் வகையில் விரைவில் அதற்கென ஒரு போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ அடுத்த வாரத்தில் அரசாங்கத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி நடத்தப்படும்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்