சுங்கச்சாவடி தகர்த்த சோழன்: வேல்முருகனுக்கு நெட்டிசன்கள் புகழாரம்

திங்கள், 2 ஏப்ரல் 2018 (16:44 IST)
சுங்கம் தவிர்த்த சோழனைப் போல் சுங்கச்சாவடி தகர்த்த சோழன் என தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை பல்வேறு கட்சிகள் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வேல்முருகன் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தொண்டர்கள் நேற்று முன் தினம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர்.

ஏற்கனவே ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் கடுங்கோபத்தில் இருந்த தமிழக மக்களுக்கு குறிப்பாக வாகனம் வைத்திருப்பவர்களுக்கு இந்த சுங்கச்சாவடி தகர்ப்பு இனிய செய்தியாக வந்தது.

 
எனவே வேல்முருகனையும் அவரது கட்சியினர்களையும் நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். இதோ நெட்டிசன்களின் ஒருசில டுவீட்டுக்கள்:
 

சுங்கம் தவிர்த்த சோழன் #குலோத்துங்கன்

சுங்கசாவடி தகர்த்த சோழன் #வேல்முருகன்.

— அருள்குமார் (@Tamilkkanal) April 1, 2018

நீர் மறுப்பதும், நீதியை மறுப்பதும்தான் வன்முறை. வரியை மறுப்பது வன்முறை அல்ல.#IndiaBetraysTamilnadu#வேல்முருகன் #சுங்கவரி #சுங்கச்சாவடி

— Blessly John (@BlesslyJohn) April 1, 2018

பெரிய கட்சி எல்லாம் பழைய கேஸ் அது இதுன்னு பயந்துட்டு ஆக்ரோசமான எதிர்ப்பு காட்டமாட்டானுக, இவங்க இன்னிக்கு பன்னது தரமான சம்பவம்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்