கோடை விடுமுறைக்காக இயக்கப்பட்ட தாம்பரம் - நாகர்கோவில் ரயில் நீட்டிப்பா?

Mahendran
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (16:22 IST)
கோடை விடுமுறைக்காக இயக்கப்பட்ட தாம்பரம் - நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் - தாம்பரம் ரயில் கூடுதலாக மூன்று மாதங்களுக்கு இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கோடை விடுமுறையின் போது சென்னையில் உள்ளவர்கள் தென் மாவட்டங்களுக்கு சென்று வருவதற்கு வசதியாக தாம்பரம் - நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர ரயில் இயக்கப்பட்டது.

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்பட்ட நிலையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ரயில் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாகர்கோவிலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06012), மறுநாள் காலை திங்கட்கிழமை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில் செப்டம்பர் 1, 8, 15, 22, 29, அக்டோபர் 6,13,20,27, நவம்பர் 3,10,17,24 ஆகிய நாள்களில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மறுவழித்தடத்தில் தாம்பரத்தில் இருந்து திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06011) மறுநாள் காலை 3.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் செப்டம்பர் 2, 9, 16, 23, 30, அக்டோபர் 7,14,21,28, நவம்பர் 4,11,18,25 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்