ரஜினிகாந்தின் திட்டம் இதுதான் - தமிழருவி மணியன் பேட்டி

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (16:39 IST)
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வருவார் என தொடர்ந்து கூறிவரும் காந்திய மக்கள் இயக்கம் தமிழருவி மணியன், ரஜினியின் அரசியல் கொள்ளைகள் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் பேசும் போது “ ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். கண்டிப்பாக எந்த கட்சியுடனும் அவர் இணைய மாட்டார். தனிக்கட்சி ஒன்றை தொடங்குவார். அதேபோல், அவர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார்” என கூறினார்.
 
மேலும், ரஜினியின் அரசியல் கொள்கைகள் இவைகள்தான் என அவர் கூறியவை:
 
தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான் அவரின் முதல் லட்சியம். மகாநதி முதல் காவேரி வரை அனைத்து நதிகளையும் இணைத்து விட்டால், காவேரி பிரச்சனை முற்றிலும் முடிவுக்கு வரும் என அவர் நம்புகிறார். அதேபோல், விவசாயிகளுக்கு குடிநீர் பிரச்சனை எப்போதும் வராது.
 
இரண்டாவதாக, ஊழல் இல்லாத ஆட்சியை அவர் தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என அவர் விரும்புகிறார். 
 
மூன்றாவதாக, ஆட்சியில் வெளிப்படைத்தன்மை.. அதைக் கொண்டுவந்து விட்டால் பல பிரச்சனைகள் முடிவிற்கு வந்து விடும் என்பது அவரின் நம்பிக்கை. முக்கியமாக, ஊழலை ஒட்டுமொத்தமாக ஒழித்துவிடலாம் என்பதே அவரின் மூன்றாவது கொள்கை என அவர் தெரிவித்தார்.
 
அதேபோல், அவருக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறுகிறார்கள். எனக்கு தெரிந்தவரை அவரின் பின்னால் பாஜக உட்பட எந்த கட்சியும் இல்லை என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்