எந்த தகுதியும் இல்லாத என்னை நடிகனாக்கியது நீங்கள் தான் - சூர்யா நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 6 ஜனவரி 2020 (13:12 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சூர்யா ஒரு நடிகராகி மட்டும் சிறந்து விளங்காமல் சினிமாவில் நடித்து தான் சம்பாதித்த பணத்தை ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அகரம் அறக்கட்டளை மூலம் சமூக பணிகளையும் செய்து வருகிறார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அகரம் அறக்கட்டளை, வசதி வாய்ப்பில்லாத ஏழை எளிய மாணவிகளுக்கு கல்வி வழங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அகரம் அறக்கட்டளை சார்பில் “வித்தியாசம் தான் அழகு, உலகம் பிறந்தது நமக்காக” என இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது. இந்த விழகில்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜ், நடிகர் சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
அப்போது பேசிய நடிகர் சூர்யா, படிப்பில் பின் தங்கியிருந்ததால் பல இடங்களில் கூச்சத்தோடு ஒதுங்கி நின்றிருக்கிறேன். வேற திறமையும் இல்லாததால் வாழ்க்கையில் என்ன செய்ய போகிறேன் என்ற வருத்தத்தில் நடிகனுக்கான எந்த தகுதியும் இல்லாமல்  நடிகனாக திரைத்துறையில் நுழைந்தேன். ஆனால், தகுதி இல்லாத என்னையும்  மக்கள் ஏற்றுக் கொண்டனர். அந்த ஒரு காரணம் தான், என்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு எதாவது செய்யவேண்டும் என எண்ணி அகரம் அறக்கட்டளை ஆரம்பித்தேன். மேலும்,  இணை என்கிற ஒரு திட்டத்தை தொடக்கி முதற்கட்டமாக 100 அரசு பள்ளிகளை மேம்படுத்தவும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றோம்’ என்று அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்