பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காதர் பாட்ஷா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த மனுவில், தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் வழக்கு பதிவு செய்தார் என்றும், உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தன்னை கைது செய்ததாகவும் தெரிவித்திருந்தார்.
எனவே, அவர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.