சிறுவன் சுஜித் மரணம் அடைந்தது எப்போது? அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (06:32 IST)
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை மீட்க கடந்த நான்கு நாட்களாக மாநில மற்றும் தேசிய மீட்புப்படையினர் போராடி வந்த நிலையில் இன்று அதிகாலை சுஜித்தை பிணமாக மட்டுமே மீட்க முடிந்தது.
 
நேற்று இரவு 10.30 மணியில் இருந்தே துர்நாற்றம் வீசியதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்த நிலையில் அடுத்த அரை மணி நேரத்தில் குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டதாகவும், சுஜித்தின் உடல் சிதைந்து இருப்பதாகவும் ராதாகிருஷ்ணன் அவர்கள் அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.
 
இதனால் சுஜித்தின் பெற்றோர் உள்பட நடுக்காட்டுப்பட்டியே சோகமயமானது. சுஜித்தின் உயிரைத்தான் காப்பாற்ற முடியவில்லை, உடலையாவது மீட்க வேண்டும் என்ற வேண்டுக்கோளுக்கு இணங்க சுஜித்தின் உடலை தேசிய மீட்புப்படையினர் இரண்டு மணி நேரம் போராடி சிதைந்த நிலையில் மீட்டனர்.
 
இதனையடுத்து சுஜித்தின் உடல் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அதன்பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், நடுக்காட்டுப்பட்டியில் குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. சுஜித்தின் மரணத்தால் நடுக்காட்டுப்பட்டியில் உள்ள மக்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்