2017-ல் தமிழக அரசியலில் நடக்கபோவது என்ன? சுப்பிரமணியன் சுவாமி ஆருடம்!

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2017 (09:15 IST)
தமிழக அரசியலில் என்ன நடக்க போகிறது என்று பாஜக எம்பி  சுப்பிரமணியன் சுவாமி ஒரு கணிப்பை தெரிவித்துள்ளார்.


 
 
அதன்படி, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுதலை செய்ததை எதிர்த்த மேல்முறையீடு மனுவின் மீதான தீர்ப்பு ஜனவரியில் வரும்.
 
மேலும், தமிழகத்தில் பாஜகவுக்கு தற்போது ஒரு சீட்தான் கிடைக்கும் நிலை உள்ளது. எனவே தற்போதைய அரசியல் சூழலில் தமிழக பாஜகவுக்கு புதிய தலைமை தேவைப்படும். புதிய செயற்குழு, பொதுக்குழு அவசியமான ஒன்றாகும். 
 
தற்போது பதவியேற்ற சசிகலாவுக்கு அதிமுக பொதுச்செயலராகும் தகுதி இல்லை என்று சொல்லும் காங்கிரஸ் கட்சியினருக்கு, சோனியாவிடம் என்ன தகுதி இருக்கிறது என சொல்ல வேண்டும்? எனவும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்