செல்போனில் மூழ்கும் மாணவர்கள்..நீதிபதிகள் வேதனை

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (19:08 IST)
சென்னை உயர் நீதிமன்றம் இன்று,மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டில்  அடிமை ஆகாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தான் காப்பாற்ற முடியும் எனத் தெரிவித்துள்ளது.

இருபத்தியோராம் நூற்றாண்டில் தற்போது இளைஞர்கள் பெரும்பாலும் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், பப்ஜி போன்ற ஆன்லைன் கேமிலேயே நேரத்தைத் தொலைக்கின்றனர்.

90 களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் இருந்ததுபோல் மாணவர் மற்றும் இளைஞர்கள் பெரிதாக புத்தக, வாசிப்பு, கலை சார்ந்தவற்றில் ஆர்வம் குவிக்க தவறுவதாக விமர்சகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் இன்று, செல்போன், மடிக்கணினி, கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி மார்ட்டின் என்பவர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு குறித்த விசாரணையின் போது மனுதாரர் தரப்பி ஆஜராஜ வழக்கறிஞர்,  ஆன்லைன் கேம்களால் மாணவர்கள் வன்முறைக்கு ஆளவதாகத் தெரிவித்தார்.

இதுகுறித்து வேதனை தெரிவித்த நீதிபதிகள், மாணவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி மன அழுத்தத்தால் தற்கொலை செய்ய முயற்சிப்பதாகத் தெரிவித்தனர்.  இதைத்தடுக்க, மத்திய, மாநில அரசுகளால் தான் முடியும் எனத் தெரிவித்தனர். மேலும் பெற்றோர் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டுமெனவும் அறிவுறித்தினர்.  இதன்பின்னர் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்குமாறு இவ்வழக்கை ஒத்திவைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்