இன்று சென்னை வரும் 6 லட்சம் தடுப்பூசிகள்! – நாளை முதல் முகாம்கள் தொடங்க வாய்ப்பு!

வியாழன், 1 ஜூலை 2021 (16:59 IST)
தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 6 லட்சம் தடுப்பூசிகள் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலில் உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வருவதில் காலதாமதம் ஏற்படுவதால் அடிக்கடி தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் முகாம் அமைத்து போடப்பட்டு வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை மத்திய அரசு ஒதுக்கீட்டில் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் நாளை முதல் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்