ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - ஜூன் 7ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (12:01 IST)
ஸ்டெர்லைட் ஆலையை மீட்கக் கோரிய வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் 2 மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்தார். 
 
இந்நிலையில் வைகோ ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கும், ஆலையை விரிவாக்கம் செய்வதற்கும் தடை விதிக்கக் கோரி  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  
 
இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்கவோ, விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளவோ மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார்.
 
இதனையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்