அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - எதிர்ப்பு கொடி தூக்கிய ஜீயர்

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (13:21 IST)
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர். 
 
தமிழக அரசு சமீபத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை கொண்டுவந்தது என்பதும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனம் சமீபத்தில் நடந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர். 
 
அவர் கூறியதாவது, கோயில்களில் ஆகமவிதிப்படி பூஜை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. கோயில் நடைமுறைகளை மாற்றக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்