6 ரூபாய் மதிப்புள்ள Vodafone பங்கை 10 ரூபாய்க்கு வாங்கிய அரசு! 11 ஆயிரம் கோடி நஷ்டம்!?

Prasanth Karthick

செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (10:02 IST)

இந்தியாவில் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள வோடஃபோனின் பங்குகளை மத்திய அரசு அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

 

இந்தியாவில் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களாக ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகியவை இருந்து வருகின்றன. இதில் வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் தனித்தனியாக இயங்கி வந்த நிலையில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ஒன்றாக இணைந்தன.

 

இந்த வோடஃபோன் நிறுவனத்தின் பங்குகளை சமீபத்தில் மத்திய அரசு வாங்கியுள்ளது. ஒரு பங்கின் விலை ரூ.10 என்ற கணக்கில் ரூ.37 ஆயிரம் கோடிக்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வோடஃபோனின் 49 சதவீத பங்குகளை மத்திய அரசு பெற்றுள்ளது.

 

ஆனால் பங்குச்சந்தையில் வோடஃபோனின் ஓபன் மார்க்கெட் ஷேர் மதிப்பு ரூ.6.80 ஆக இருக்கும் நிலையில், அதை ரூ.10 என அதிக விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். இவ்வாறு அதிக விலைக்கு வாங்கியதால் மக்கள் பணம் ரூ.11,840 கோடி விரயம் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றனர். ரூ.25,160 கோடிக்கு வாங்கியிருக்க வேண்டிய பங்குகளை ரூ.37 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்