ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா!

J.Durai
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (12:57 IST)
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிவராஜபுரம் பகுதியில் மிக பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் 50 ம் ஆண்டு திருவிழா அதி விமர்ச்சையாக நடைபெற்றது.
 
முன்னதாக அம்மனுக்கு சீர் வரிசை தட்டுகள் மேளதாளங்கள் முழுங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது.
 
இதனைத் தொடர்ந்து ஆடு,கோழிகளை பலியிட்டு அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர் பின்னர் கோயில் நிர்வாகி கோபி தலைமையில் பக்தர்களுக்கு 5 வகையான உணவினை அன்னதானமாக வழங்கப்பட்டது.
 
இதில் கோயில் நிர்வாகிகள் நாகராஜன்,விஜயகுமார்,ராஜேந்திரன்,கோபி,பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் பின்னர் மலர்களால் அலங்காரிக்கப்பட்ட பூகரகம் நிகழ்ச்சி நடைபெற்றது
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்