ஹெலிகாப்டர் விபத்தை வீடியோ எடுத்தவர்கள் யார்? – தேடிவரும் தனிப்படை!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:45 IST)
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ வைரலான நிலையில் வீடியோ எடுத்தவர்களை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியத்தில் அதில் பயணித்த முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர்களது உடல் டெல்லியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து ஏற்படும் முன்னதாக ஹெலிகாப்டர் பறப்பதை சுற்றுலா பயணிகள் சிலர் வீடியோ எடுத்திருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதில் ஹெலிகாப்டர் மேகத்தில் மறைந்த சில வினாடிகளில் பெரும் சத்தம் கேட்க, பயணி ஒருவர் “என்னாச்சு.. உடைஞ்சிருச்சா..” என கேட்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இந்த வீடியோவை எடுத்த சுற்றுலா பயணிகளையும் தேடி பிடித்து விசாரிக்க தனிப்படை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. எங்கிருந்து, எந்த சமயம் அந்த வீடியோ எடுக்கப்பட்டது போன்ற விவரங்களை அவர்களிடம் பெற தனிப்படை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் மட்டுமல்லாமல் விபத்தை பார்த்த 30க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்