தென்மாவட்டத்தில் இருந்து வரும் ரயில்கள் விழுப்புரத்தில் திடீர் நிறுத்தம்: பயணிகள் அதிர்ச்சி..!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (07:28 IST)
இன்று அதிகாலை தென் மாவட்டத்திலிருந்து வரும் ரயில்கள் அனைத்தும் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
 
விழுப்புரம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டிருப்பதன் காரணமாக தற்போது நான்கு விரைவு ரயில்கள் நிறுத்த நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இனி வரும் ரயில்களும் விழுப்புரத்தில் நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
விழுப்புரம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு காரணமாக முத்துநகர், சாளுக்கியா, அனந்தபுரி மற்றும் செங்கோட்டைஆகிய நான்கு விரைவு ரயில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது 
 
இந்த ரயில்கள் சுமார் 40 நிமிடங்களாக நிறுத்தப்பட்டு இருப்பதால் பயணிகள் கடும் அவதிகள் உள்ளனர். மேலும் இனி வரவிருக்கும் ரயில்களும் விழுப்புரத்தில் நிறுத்தப்படலாம் என்று அதனால் தென் மாவட்டத்திலிருந்து வரும் ரயில்கள் சென்னை வருவதற்கு தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்