தமிழகம் முழுதும் ஒரே மாதிரி தளர்வுகள்...

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (20:39 IST)
இந்தியாவில் நாள்தோறும் கொரொனா இரண்டாம் அலைப்பரவல் அதிகரித்து வந்த நிலையில்  இரண்டு வாரங்களாகக் குறைந்து வருகிறது.
 

அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க மத்திய அரசு அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா கால  ஊரடங்கில் 3 விதத்தில் பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகள் தர அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், தற்போது கொரோனா முழுவதுமாகக் குறைந்து வருவதால்,   அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 கடந்த சில வாரங்களாக அதிகளவு கொரோனா தொற்றுக் காணப்பட்ட கோவை, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்றுக் குறைந்துள்ளதால் விரைவில் தமிழக அரசு கூடுதல் தளர்வுகள் அளிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்