ஓடும் பஸ்ஸில் நர்ஸிடம் சில்மிஷம்: சிலுக்குபட்டியில் அடிதடி!

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (16:03 IST)
போருந்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்டதால் அதை தட்டிக்கேட்கப் போய் அடிதடியில் முடிந்துள்ளது. 
 
திருச்சுழி அருகேயுள்ள சிலுக்குபட்டியை சேர்ந்த 28 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார். சமபவ நாளன்று அவர் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். 
 
பேருந்தில் பயனித்துக்கொண்டிருந்த போது கருப்பசாமி என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டுள்ளார். இது குறித்து உடனடியாக அந்த பெண் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். 
 
அந்த பெண்ணின் உறவினர்கல் சிலர் பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருந்து பஸ் வந்ததும் கருப்பசாமியை சரமாரியாக தாக்கினர். பதிலுக்கு கருப்புசாமி தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்க அவர்களும் வந்து அடிதடியாக மாரியது. 
 
இதில் 9 பேர் காயமடைந்தனர். இது குறித்து போலீசில் புகார் அளிகப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்