அரசியல்வாதிகள் பலருக்கு சிலை திருட்டு வழக்கில் சம்மந்தம் இருக்கு: முக்கிய பிரமுகர் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (16:28 IST)
பல அரசியல் வாதிகள் சிலை திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர் என இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் ந.முருகானந்தம் கரூரில் தெரிவித்தார்.
கரூரில் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் இந்து முன்னணியின் கோட்டத்தலைவர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் ந.முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வரும் 30 ம் தேதி கரூரில் நடைபெறும் திருச்சி கோட்ட மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினர். 
 
கரூர் மாவட்ட பொதுச்செயலாளர் முருகேசன், மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் ந.முருகானந்தம், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டும் தான் சலுகைகள் தர மத்திய அரசும், மாநில அரசுகளும் வஞ்சிக்கின்றது. இதே, கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குகின்றது என்றும், இந்துக்களுக்கு ஒரு விழிப்புணர்வு இல்லாததினால் தான் இந்நிலை நீடிப்பதாகவும், இதே நிலையில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் சலுகைகள் கிடைப்பதாகவும் குற்றம் சாட்டிய ந.முருகானந்தம், கரூர் மாவட்டத்தில் மாயனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பிளக்ஸ்களை இந்துக்கள் வைத்திருந்தால் மட்டுமே அகற்றும் அரசாக இருக்கின்றதே, தவிர மற்ற மதத்தினர் வைத்திருந்தால், எடுக்க மறுக்கின்றார்கள். மேலும் சிலை திருட்டு வழக்கில் ஏராளமான அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனர்.

ஆகவே தான் பொன்.மாணிக்கவேலின் ஆய்வினை எதிர்க்கின்றார்கள். ஆகவே நீதி கிடைக்க
வேண்டுமென்றும், இந்துக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்க, ஆங்காங்கே இந்து முன்னணி சார்பில் வரும் 30 ம் தேதி மாநாடு நிகழ்ச்சி நடக்கின்றது என்றார். மேலும், சபரிமலை போராட்டத்திற்கு ஒரு சில பெண்கள் மட்டுமே, கோயிலில் இந்துக்கள் இருக்க கூடாது என்றும் விஷமிகள் போல செயல்படுகின்றனர். ஆனால் அதே பெண்கள் நாங்கள்கோயிலுக்கு செல்ல மாட்டோம் என்று போராட்டம் நடத்துகின்றனர் என்பதையும்
சுட்டிக்காட்டினார்.

C.ஆனந்தகுமார்

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்