எடப்பாடி, ஓபிஎஸ் டெபாசிட் இழப்பார்கள் - செந்தில் பாலாஜி (வீடியோ)

Webdunia
வியாழன், 26 ஏப்ரல் 2018 (14:28 IST)
கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் கரூர் தெற்கு நகர செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 

 
இந்த கூட்டத்திற்கு சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் அமைப்பு செயலாளருமான வி.செந்தில் பாலாஜி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது “தமிழகத்தில் ஆளுகின்ற அரசு, மத்திய அரசை கண்டித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கண்டித்து என்கின்ற வார்த்தைக்கூட ஒரு பிளக்ஸ் பேனரில், இடம்பெறவில்லை., ஆனால், தமிழகம் முழுவதும் அ.தி.மு.க உண்ணாவிரதம் என்கின்ற நாடகம் நடத்தியது. 
 
சசிகலாவினாலும், சசிகலா குடும்பத்தினரினாலும் தான் தங்கமணியும், அவரோடு சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் பதவி வாங்கினர். இந்திய அரசியலமைப்பு வரலாற்று சாசனத்தில் ஆளுகின்ற ஒரு கட்சியின் முதல்வர் உள்பட அனைத்து துறை அமைச்சர்களும் வரும் தேர்தலில் டெபாசிட் இழக்கும் வகையில் தோற்றுப்போவார்கள்” என அவர் தெரிவித்தார்.
-சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்