ஜாமின் கோரி செந்தில் பாலாஜி மூன்றாவது முறையாக மனு: நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

புதன், 3 ஜனவரி 2024 (12:43 IST)
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் கடந்த சில மாதங்களாக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 
 
ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள இந்த மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் ஜனவரி 18ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை ஒத்திவைத்து முதன்மை அமர்வு நீதிபதி எஸ் ஒன்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ALSO READ: ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கலாம்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
 
உடல்நிலையை அடிப்படையாக வைத்து ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்ததை அடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் அவர் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும் வரை அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இல்லை என சட்ட வல்லுனர்கள் கூறி வருகின்றனர்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்