ரஜினிக்கு வஞ்சனையில்லாமல் வக்காலத்து வாங்கும் செல்லூரார்!

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (16:32 IST)
அன்று அண்ணா கூறியதை இன்று ரஜினிகாந்த் தனது பாணியில் சில விஷயங்களை பேசியுள்ளார் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
 
நடிகர் ரஜினிகாந்த் காஷ்மீர் குறித்த மத்திய அரசின் முடிவை ஏன் ஆதாரித்தேன் என சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், காஷ்மீர் என்பது பயங்கரவாதிகளுக்கு தாய்வீடாக இருந்து வருகிறது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதற்கு நுழைவு வாயிலாக உள்ளது. காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுவதற்கான மசோதாவை முன்கூட்டியே அறிவித்திருந்தால் எதிரிகள் விழித்திருப்பார்கள். 
 
எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்கக் கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் பாதுக்காப்புடன் தொடர்புடையது என்பதால் காஷ்மீர் பிரிப்பு நடவடிக்கையை பாராட்டினேன் என்று கூறினார். 
ரஜினியின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து செல்லூர் ராஜூ பேசியது பின்வருமாறு, நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமையை கருத்தில் கொண்டுதான் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தை அரசியலாக்க கூடாது என்று ரஜினி தெரிவித்துள்ளார்,
 
ரஜினிகாந்த் கூறிய கருத்தை 1962 ஆம் ஆண்டு வீடு இருந்தால் தான் கூரை இருக்கும் என அண்ணா கூறியுள்ளார். பேரறிஞர் அண்ணா ஏற்கனவே கூறிய கருத்தை ரஜினி அவரது பாணியில் சொல்லியிருக்கிறார். ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது என ஆதரவு தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்