இம்முறை ரஜினிகாந்த! மீண்டும் தமிழகத்தின் அரசியல் மையமாகுமா போயஸ் கார்டன்?

வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (11:29 IST)
ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தின் மூலம் மீண்டும் போயஸ் கார்டன் தமிழகத்தின் அரசியல் மையமாகுமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ரஜினி. 
 
சமீபத்தில் போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் காஷ்மீர் விவகாரத்தில் ஏன் ஆதரவு தெரிவித்தேன் என விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, 
 
காஷ்மீர் என்பது பயங்கரவாதிகளுக்கு தாய்வீடாக இருந்து வருகிறது. இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதற்கு நுழைவு வாயிலாக உள்ளது. காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுவதற்கான மசோதாவை முன்கூட்டியே அறிவித்திருந்தால் எதிரிகள் விழித்திருப்பார்கள். 
எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்கக் கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டின் பாதுக்காப்புடன் தொடர்புடையது என்பதால் காஷ்மீர் பிரிப்பு நடவடிக்கையை பாராட்டினேன் என்று கூறினார். 
 
அதன் பின்னர் ரஜினியின் அரசியல் வரவு பற்றியும், அப்படி அவர் அரசியலுக்கு வந்தால் ஜெயலலிதா இருந்த போது போயஸ் கார்டன் அரசியல் மையமாக இருந்தது போல் மீண்டும் மாறுமா என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்ததாவது, 
 
கட்சி அறிவிப்பு எப்போது என்பதை நிச்சயமாக ஊடகங்கள் முன்னிலையில் தெரிவிப்பேன். போயஸ் கார்டன் தமிழக அரசியல் மையமாக மீண்டும் வருமா என்பதை காத்திருந்து பாருங்கள் என கூறினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்