நான் பாஜகவை பின்பற்றவில்லை, பாஜக தான் என்னை பின்பற்றுகிறது: சீமான்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (15:38 IST)
நான் பாஜகவை பின்பற்றவில்லை என்றும் பாஜக தான் என்னை பின்பற்றுவது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
நாம் தமிழர் கட்சியின் சீமான் சமீபத்தில் பேட்டி அளித்த போது நான் முருகனை கும்பிட்டால் பாஜகவும் முருகனை கும்பிடுகிறது என்றும் நான் தமிழ் பாட்டன் என்று முருகனை சொன்னால் பாஜகவும் முருகனை தமிழ் மன்னன் என்று சொல்லும் என்றும் தெரிவித்தார். 
 
என்னுடைய மறு உருவம் பாஜக என்று வேண்டுமானால் சொல்லுங்கள்,  பாஜகவை  நான் பின்பற்றவில்லை பாஜக தான் என்னை பின்பற்றுகிறது என்று தெரிவித்தார். 
 
இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சீமான் அவர்களுடன் தங்களுக்கு கொள்கை அளவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க வேண்டும் என்ற புள்ளியில் நாங்கள் இருவரும் ஒன்றிணைந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்