சான் ஃப்ரான்சிஸ்கோ-னு வாய்ல வரல... முதல்வரை கலாய்த்த சீமான்!

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (15:44 IST)
செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கலாய்த்து தள்ளியுள்ளார். 
 
தமிழக அரசு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இதை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசை விமர்சித்தனர். 
 
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு, 
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவது குழந்தைகள் மீதான கொடுமையான வன்முறையாக நான் பார்க்கிறேன். கல்வி என்றால் என்னவென்றே தெரியாதவர்களிடம் ஆட்சி உள்ளதால் எதை பற்றியும் யோசிக்காமல் மத்திய அரசு சொன்னதும் அதை தமிழகம் செய்ல்பாட்டிற்கு கொண்டு வருகிறது. 
 
முதலில் கல்வி அமைச்சர்கள் 8 ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடையட்டும் அதன் பின்னர் பிள்ளைகளை படிக்க வைப்போம். ஒன்னுமே இல்ல, பார்த்து படிக்கும் போதே சான் ஃப்ரான்சிஸ்கோ, லாஸ் எஞ்சல்ஸ் சொல்ல தெரியல, என்ன இது எல்லாம் கேவலம் என தெரிவித்துள்ளார். 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் ஒருமுறை செய்தியாளர் சந்திப்பில் ஃப்ரான்சிஸ்கோ, லாஸ் எஞ்சல்ஸ் ஆகியவற்றை படிக்க திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்