மீண்டும் திரையுலகம்: சீமான் எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (08:59 IST)
நடிகர், இயக்குனர் என்ற வகையில் கோலிவுட்டில் பிரபலம் அடைந்த சீமான், கடந்த 2009ஆம் ஆண்டு 'நாம் தமிழர் கட்சி' என்ற கட்சியை ஆரம்பித்தார். அரசியல் பிரவேசத்திற்கு பின்னர் திரையுலகில் முழு ஈடுபாடு இல்லாமல் அவ்வப்போது ஒருசில படங்களில் நடித்து வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கிய 'நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ' என்ற படத்திற்கு பின்னர் சீமான் வேறு படங்களில் நடிக்கவில்லை

இந்த நிலையில் மீண்டும் திரையுலகில் திரைப்படங்களில் நடிக்கவும், படங்களை இயக்க முடிவு செய்துள்ளதாகவும் சீமான் தெரிவித்துள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தல் வரை ஒருசில படங்களில் நடிக்கவும், அதன் பின்னர் ஒரு படத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்ட சீமான் கட்சி, ஒரு தொகுதியில் கூட டெபாசிட் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் தான் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் திரையுலகிற்கு செல்ல அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்