'காலா'வுக்கு கர்நாடகா தடை: சீமான் கண்டனம்

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (21:09 IST)
அரசியல்ரீதியாக ரஜினியின் பெயரை டேமேஜ் செய்வதில் முதல் ஆளாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமான், 'காலா' படத்திற்கு கர்நாடகா தடை விதித்துள்ளதை கண்டித்துள்ளார். இதுகுறித்து சீமான் கூறியதாவது:
 
நீண்ட காலமாகவே தமிழ்த் திரைப்படங்களை கrநாடகாவில் திரையிடுவது பெரும்பாலும் தவிர்க்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் வாழும் ஒன்றரை கோடி தமிழர்கள் மட்டுமல்லாது எல்லையோரப் பகுதிகளில் வாழும் கன்னடர்கள் கூட தமிழ்த் திரைப்படங்களை விரும்பி பார்க்கின்றனர். எனவே ‘காலா’ திரைப்படத்தை கர்நாடாவில் வெளியிட தடை விதித்திருப்பது பெரிய இழப்புதான். 
 
சத்யராஜ் நடித்த ‘பாகுபலி’ திரைப்படத்திற்கும் இதேநிலை ஏற்பட்டபோதும் நாங்கள் இதே உணர்வில் தான் இருந்தோம். அண்ணன் பொன்.இராதாகிருஷ்ணன் போன்றோர் ‘காலா’ திரைப்படத்திற்கு குரல் கொடுக்கிறார்; ஆனால் சத்யராஜ் நடித்த ‘பாகுபலி’ திரைப்படத்திற்கு ஏன் இதேபோல் குரல்கொடுக்கவில்லை? அவர் நடுநிலையாகத் தானே பேசியிருக்கவேண்டும்? 
 
இப்பொழுது அவர்களுக்கு வேண்டியவர்கள் என்பதால் மட்டும் எதிர்த்து குரல் கொடுப்பதா? இது ரஜினி படம் என்று மட்டும் பார்க்கக்கூடாது; இது இந்த மண்ணிலிருந்து வெளிவரும் படம்! ‘மெர்சல்’ படத்திற்கு வராத இடையூறுகளா..? நாளை கமல் படத்திற்கோ? விஜய் படத்திற்கோ? என் படத்திற்கோ இடையூறு ஏற்பட்டாலும் இதே நிலைப்பாடுதான் எங்களுடையது” என்று சீமான் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்