சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை: சீமான் கருத்து!!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:14 IST)
சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என சீமான் கருத்து.


ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக சவுக்கு சங்கருக்கு நேற்று ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் மதுரை சிறையிலிருந்து கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று நள்ளிரவு கடலூர் சிறைக்கு அவர் மாற்றப்பட்டதாகவும் நிர்வாக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாகவும் மத்திய சிறை துறை தகவல் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டதாவது, தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல. சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது என சீமான் கருத்து.

நீதித்துறை குறித்து விமர்சித்ததற்காக, வலையொளியாளர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறுமாத காலம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவரின் கருத்துக்களில் பலவற்றில் முரண்பட்டாலும், அவரின் கருத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றே கருதுகிறேன்.

‘நீதிமன்றங்கள், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்’ என்கிற அவரது வாதம் ஏற்கப்படவேண்டிய ஒன்றுதான். மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கிற நீதிமன்றங்கள் எந்தத் தவறும் இழைத்துவிடக்கூடாது என்கிற நோக்கம் மிகச்சரியானது.

ஆகவே, தம்பி சவுக்கு சங்கரின் அடிப்படையான நோக்கத்தையும், தனி நபர் சனநாயக உரிமையைக் கருத்தில கொண்டும் அவருக்கு வழங்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனையை, மாண்புமிகு உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து அவரை விடுவிக்க வேண்டுமெனக் கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்