500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு மோடியும் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
“பெரும்பாலான நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கவில்லை? என்று ரஜினி கேள்வி எழுப்பவில்லை. அதேபோல், காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும், ஒரு வார்த்தை பேசவில்லை. ஆனால் தற்போது, புதிய இந்தியா பிறந்துவிட்டது என ரஜினி உற்சாகப்படுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், பணத்தை மாற்ற எந்த பணக்காரரும் வங்கியின் முன்பு வரிசையில் நிற்கவில்லை. ஏழைகளும், நடுத்தர மக்களும்தான் நிற்கிறார்கள். ரூபாய் நோட்டை ஒழித்துவிடுவதால், லஞ்சம் ஒழிந்து விடுமா?. மோடியின் அறிவிப்பை புகழ்ந்து பேசிய நடிகர்கள் புனிதர்கள் ஆகிவிடுவார்களா? ” என்று அவர் கேள்வி எழுப்பினார்.