ஆட்சியில் பங்கு என்ற நிலையில் இருந்து பின்வாங்க கூடாது: சீமான் அறிவுரை..!

Mahendran
சனி, 14 செப்டம்பர் 2024 (14:33 IST)
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற நிலையில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பின் வாங்க கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் கடந்த நாட்களாக சலசலப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திடீரென மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு இன்னும் நீங்காத நிலையில் இன்று திடீரென ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று திருமாவளவன் பேசிய பழைய வீடியோ அவருடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு அதன் பின் உடனே நீக்கப்பட்டது.

இது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ஒரு நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் அண்ணன் கருத்தை தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தைரியத்தை பாராட்டுகிறேன். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் நிலைப்பாட்டில் பின்வாங்காமல் அவர் உறுதியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்