கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்கு சீல்

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:43 IST)
கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே ஒரு சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரவி வரும் செய்திகள் வெளியாகி வருகின்றன. 
 
முன்னதாக காய்ச்சல், வாந்தி, பேதி, இருமல், உடல் வலி, சோர்வு உள்ளிட்ட கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தால், மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து தற்போது மேலும் ஒரு புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
ஆம், கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள பள்ளிகளுக்கு சீல் வைக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகளில் பாதிப்பு ஏற்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட அந்த பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவு வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்