நீட் தேர்வை எதிர்த்து போராட்டத்தில் குதித்த பள்ளி மாணவிகள்

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (15:01 IST)
சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி மாணவிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 


 

 
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அனிதா மரணத்துக்கு நீதி கோரியும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி மாணவிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
 
காவல்துறையினர் போரட்டத்தை கைவிட கோரி மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் மாணவிகளின் கோரிக்கையை அரசிடம் எடுத்துக் கூறுகிறோம் என காவல்துரையினர் வாக்குறுதி அளித்த பின்னரே மாணவிகள் அந்த பகுதியிலிருந்து கலைந்து சென்றனர். அங்கிருந்து கலைந்து சென்ற மாணவிகள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராடி வருகின்றனர்.
 
கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தை களத்தில் இறங்குவது வழக்கம். தற்போது பள்ளி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர். பள்ளி மாணவிகள் போராட்ட களத்தில் இறங்கியது தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்